கடத்தப்பட்ட முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விடுவிப்பு - நான்கு பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

கடத்தப்பட்ட முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விடுவிப்பு - நான்கு பேர் கைது

கடந்த மாதம் சிட்னியில் கடத்தப்பட்ட முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மேகில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 14 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை சிட்னி முழுவதும் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் விளைவாக மேகில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

50 வயதான முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மேகில் ஏப்ரல் 14 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு சிட்னியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கடத்தப்பட்டதாகவும், நகரின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் தாக்கப்பட்டு துப்பாக்கியால் மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழு உறுப்பினர்கள் 27, 29, 42 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் புதன்கிழமை அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேகில் 1998 - 2008 க்கு இடையில் அவுஸ்திரேலிய தேசிய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

No comments:

Post a Comment