கில்லி திரைப்பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

கில்லி திரைப்பட நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி

பிரபல துணை நடிகரான மாறன் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல துணை நடிகரான மாறன் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான வேதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்.

உலக அளவில் சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் பிரபலமானார். மேலும் டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதிக படங்களில் இவர் வில்லன் கெட்டப்பில் வந்தாலும் காமெடி கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார். பல மேடைகளிலும் கானா பாடல்களை பாடி இருக்கிறார். 25 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட துணை நடிகர் மாறன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி உயிர் பிரிந்தது. கொரோனாவுக்கு பலியான மாறனுக்கு 48 வயதாகிறது.

இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், நடிகர் பாண்டு பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி என அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வந்த நிலையில் தற்போது நடிகர் மாறனும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

No comments:

Post a Comment