பல்வேறு அரச ஊழியர்கள், நிறுவனங்களின் சேவை அத்தியாவசியமாக பிரகடனம் - ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

பல்வேறு அரச ஊழியர்கள், நிறுவனங்களின் சேவை அத்தியாவசியமாக பிரகடனம் - ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடு

பல்வேறு அரச ஊழியர்கள், நிறுவனங்களின் சேவை அத்தியாவசியமாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்த் தடுப்பு தொடர்பில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு, பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக கருதப்படும் சேவைகள் இவ்வாறு அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தின் அடிப்படையில் இவ்வாறு குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுக அபிவிருத்தி அதிகார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ரயில்வே, இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் உள்ளிட்டோரின் சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகங்கள், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதிச் சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவுப் பொருட்கள் முகாமைத்துவ சேவை நடவடிக்கைகள் ஆகியனவும், இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக, குறித்த அதி விசேட வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



 


No comments:

Post a Comment