கொரோனா தொற்று காரணமாக நேற்று (10) கிண்ணியா வில்வெளியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை, இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜீத் பொது மக்களை கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment