இன்று முதல் மே 31 வரை, தினமும் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை, நாடளாவிய ரீதியிலான பயணத் தடை அமுலுக்கு வருவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் சுகாதாரம், மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்து, விமான நிலையம் செல்லுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தற்போது நாடு முழுவதும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment