இலங்கைக்குள் நுழையும் அனைத்து நபர்களும் தடுப்பூசி போடப்பட்டாலும் இல்லாவிட்டாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

இலங்கைக்குள் நுழையும் அனைத்து நபர்களும் தடுப்பூசி போடப்பட்டாலும் இல்லாவிட்டாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம்

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டிற்குள் நுழையும் அனைத்து நபர்களும் தடுப்பூசி போடப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது குறித்த புதிய விதிமுறைகள் அடங்கிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், அண்மையில் வெளியிடப்பட்ட இது தொடர்பான சுற்றுநிருபத்தில், கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு, ஒரு நாள் மாத்திரம் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட்டிருந்ததோடு, PCR சோதனைக்கு அமைய வீடு சென்று, சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment