சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயரெடுத்தவன் நான் - சுமந்திரன் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயரெடுத்தவன் நான் - சுமந்திரன்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

எந்த இடத்திலும் எந்தப் பொய்யையும் ஒரு தடவையேனும் நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையைக் கூறுவதால் பலருக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பகுதியிலிள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில், சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் என்ற பெயரெடுத்தவன் நான். ஆகவே, அரசியலில் பொய் சொல்ல வேண்டிய எந்தத் தேவையும் எனக்கு கிடையாது.

குறிப்பாக, எதிரணியினர் இவ்வாறு கூறித்திரிகின்றார்கள். ஜெனீவா தொடர்பாக பல இடங்களில் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கின்றேன். அதில் கேட்ட கேள்வி அனைத்திற்கும் பதில் கூறியுள்ளேன்.

ஆகவே, எந்த இடத்திலும் எந்தப் பொய்யையும் ஒரு தடவை நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையைக் கூறுவதென்பதால் பலருக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கின்றது.

ஏனென்றால், சந்திரனைக் கொண்டு வருவோம். சூரியனைக் கொண்டு வருவோம் என மக்களுக்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நான் அவ்வாறில்லை. இப்படி தான் என தெளிவுபடுத்துகின்றேன். இவ்விடயம் தான் அவர்களுக்கு கசக்கின்றது எனக்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad