முதலாம் கட்டமாக அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு இண்டாம் கட்டமாக ஸ்புட்னிக் ஏற்ற இதுவரை தீர்மானமில்லை : விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

முதலாம் கட்டமாக அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு இண்டாம் கட்டமாக ஸ்புட்னிக் ஏற்ற இதுவரை தீர்மானமில்லை : விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசியாக அஸ்ட்ரசெனிகா முதலாம் கட்டமாக வழங்கியவர்களுக்கு அதன் இரண்டாம் கட்டமாக ஸ்புட்னிக் தடுப்பூசியை ஏற்றுவதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை. கலப்பு தடுப்பூசி ஏற்றுவதில் எந்த பாதிப்பும் இல்லை என்பது விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இந்தியாவின் அஸ்ட்ரசெனிகா முதலாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு அதன் இரண்டாம் தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானத்தை மேற்கொள்வில்லை. 

முதலாது மற்றும் இரண்டாவது தடுப்பூசி ஒன்றுக்கொன்று மாறுபட்ட தடுப்பூசிகள் மூலம் வழங்குவது, ஒத்துப்போகக்கூடியது, பாதுகாப்பானது என குறிப்பிட்ட விஞ்ஞான ரீதியிலான ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அவ்வாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

மேலும் அஸ்ட்ரசெனிகா முதலாது தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியாக ஸ்புட்னிக் வழங்குவதற்கு முடியுமா என்ற ஆய்வு பரிசோதனையை தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கவனம் செலுத்தி வருகின்றோம். 

அஸ்ட்ரசெனிகா முதலாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுகாக அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு மேலும் 6 இலட்சம் வரையான தடுப்பூசி பற்றாக்குறையாக இருந்து வருகின்றது.

என்றாலும், பற்றாக்குறையாக இருக்கும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக் கொள்ள முடியுமான அனைத்து வகையான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். 

இருந்தபோதும் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தும் வரை அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியாக வேறு எந்த தடுப்பூசிகளையும் மக்களுக்கு ஏற்றப்போவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment