பிலியந்தலை சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை பூட்டு - திடீரென 101 பேர் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

பிலியந்தலை சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை பூட்டு - திடீரென 101 பேர் அடையாளம்

பிலியந்தலை பொதுச் சந்தை தொகுதி உள்ளிட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதுச் சந்தை மற்றும் சந்தைக் கட்டடத் தொகுதி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொவிட்-19 சோதனைகளில் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment