இலங்கையில் மேலும் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்! - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

இலங்கையில் மேலும் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

நாட்டில் மேலும் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரம்பிட்டிய, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும், பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட, கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவுவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad