ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : ஒருவர் சரண் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : ஒருவர் சரண்

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீவிரவாதிகள் சரணடைவதற்கான வாய்ப்பை நிராகரித்த நிலையிலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காஷ்மீர் பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்போது பயங்கரவாதிகள் திடீரென தாக்குகுதல் நடத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடம் பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

எனினும் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்கள் ஒருவரான தவுசிஃப் அகமது என்ற நபர் சரணடைந்தார். உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment