கொட்டகலையில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

கொட்டகலையில் கொரோனா தொற்றினால் ஒருவர் மரணம்

கொட்டகலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுக்களை தோட்டத்தில் இன்று (26.05.2021) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை சளி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மரணமடைந்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் வைத்தியசாலையிலேயே தகனம் செய்யப்பட்டதாக அவரது மகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad