கொவிட் தடுப்பூசிகளை கலந்து போட்டால் லேசான, மிதமான பின்விளைவுகள் ஏற்படும் - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

கொவிட் தடுப்பூசிகளை கலந்து போட்டால் லேசான, மிதமான பின்விளைவுகள் ஏற்படும்

அஸ்ட்ரா செனெகா, பைசர் நிறுவனங்களின் கொவிட்-19 தடுப்பு மருந்துகளைக் கலந்து பயன்படுத்தும் பெரியவர்கள், லேசானது முதல் மிதமானது வரையிலான பின்விளைவுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வெவ்வேறு தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும்போது நடுக்கும் குளிர், தலைவலி, தசைவலி போன்ற பின்விளைவுகள் அதிகமான அளவில் ஏற்படுவதாகக் கூறப்பட்டது. 

இருப்பினும், அந்தப் பின்விளைவுகள் குறுகிய காலத்துக்கே நீடிப்பதாகவும், வேறு பெரிய ஆபத்து ஏதும் இல்லை எனவும் ஆய்வு முடிவுகள் காட்டின.

வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, ஒக்ஸ்போர்ட் வக்சின் குழுமம் நடத்திய ஆய்வில் அந்த விபரங்கள் தெரியவந்தன.

அந்த முடிவுகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவைதான் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். 

இரு வேறு தடுப்பு மருந்துகளைக் கலந்து பயன்படுத்துவதால், புதுரக வைரஸ்களில் இருந்து மேம்பட்ட பாதுகாப்புக் கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வது ஆய்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

தடுப்புமருந்து விநியோகம் தடை படும்போது, மாற்றுத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்த அனுமதிக்கலாமா என்பதைத் தீர்மானிப்பதும் அதன் மற்றொரு நோக்கமாகும்.

50 வயதுக்கு மேற்பட்ட 830 தொண்டூழியர்களிடம், பெப்ரவரி மாதத்தில் அந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது. அதன் முழுமையான முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment