இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌிநாடு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இணைந்து நேற்று (13) மற்றும் இன்றைய தினங்களில் (14) சிலாபம், சமிந்துகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களுக்கு தங்குமிட வசதியை ஏற்பாடு செய்து கொடுத்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment