சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல் வெற்றி - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல் வெற்றி

சீன - இலங்கை கூட்டு உற்பத்தியாக சினோவெக் கொரோனா தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் நாட்டினுள் உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சினோவெக் கொவிட்-19 தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல் வெற்றி அடைந்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இலங்கையில் இந்த சினோவெக் தடுப்பூசி தயாரிக்கப்படும். சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று (26) அதிகாலை நாட்டை வந்தடைந்தன.

நேற்று (26) அதிகாலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக குறித்த தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

தடுப்பூசிகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சரான பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட தரப்பினரும் இலங்கைக்கான சீன தூதுவரும் கலந்து கொண்டிருந்தனர்.

சீனாவினால் முன்னதாகவும் இலங்கைக்கு 6 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன.

இதுவரை 80 நாடுகளுக்கு சீனா, கொவிட்-19 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad