(இராஜதுரை ஹஷான்)
கொவிட் - வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கங்களுக்கும், முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் சதொச விற்பனை நிலையம் ஊடாக 5 ஆயிரம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக நடமாடும் சேவையின் பிரகாரம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொவிட் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக ஐயாயிரம் ரூபா பெறுமதியான 20 அத்தியாவசிய பொருட்களை வழங்க சதொச நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளை அரிசி 10 கிலோ கிராம், சிவப்பு அரிசி 5 கிலோ கிராம், கோதுமை மா 3 கிலோ கிராம், உருளைக் கிழங்கு 3 கிலோ கிராம், சிவப்பு பருப்பு 2 கிலோ கிராம்,வெள்ளை சீனி 1 கிலோ கிராம், சிவப்பு சீனி 1 கிலோ கிராம், நெத்தலி 500 கிராம், பெரிய வெங்காயம் 3 கிலோ கிராம், தேயிலை தூள் 200 கிராம், காய்ந்த மிளகாய் 100 கிராம், உப்பு 1 கிலோ கிராம் பக்கற், மிளகாய் தூள் 200 கிராம், சோய மீட் 2 பக்கற், நூடில்ஸ் 1 கிலோகிராம் பக்கற் 1, 500 கிராம் கிறீம் கிரகர் பிஸ்கட் பக்கற், மாரி பிஸ்கட், முக்கவசம் 10, 100 மி.லீ கிருமி நீக்கி திரவம் ஆகிய பொருட்கள் நிவாரணப் பொதியில் உள்ளடங்கும்.
No comments:
Post a Comment