யாழில் 25 க்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Friday, May 14, 2021

யாழில் 25 க்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்க ஆயத்தமாகியிருந்த நிலையில் பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 க்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை குறித்த கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கான சிறப்பு பூஜை ஏற்பாடாகியிருந்தது.

தெல்லிப்பழை பொலிசார் மற்றும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிக்கு இது தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றதையடுத்து, இன்று காலை பொதுச் சுகாதரப் பரிசோதகர் மற்றும் பொலிசார் அங்கு சென்றுள்ளனர்.

கோவிலில் வழிபாடுகள் இடம்பெற்று அன்னதானம் வழங்கவும் ஏற்பாடாகியிருத்த நிலையில், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கோவில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 க்கும் அதிகமானோர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment