கொரோனா தொற்று; 4 பிரதான தபால் நிலையங்கள் மூடப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

கொரோனா தொற்று; 4 பிரதான தபால் நிலையங்கள் மூடப்பட்டன

நாற்பதுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொம்பனித்தெரு, பாணந்துறை, வாழைத்தோட்டம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளின் பிரதான தபால் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து 22 உப தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தபால் சேவைகள் இடம்பெறமாட்டாது எனவும் பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad