நைஜீரியாவில் படகில் சென்ற 156 பேரை காணவில்லை - தேடும் பணி நடைபெறுகிறது - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

நைஜீரியாவில் படகில் சென்ற 156 பேரை காணவில்லை - தேடும் பணி நடைபெறுகிறது

நைஜர் ஆற்றில் 160 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளதாகவும், பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் அவர்கள் பயணித்து உள்ளனர் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகள் படகு ஒன்றில் புறப்பட்டனர். நைஜர் ஆற்றில் சென்ற அந்த படகு, புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன 156 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இதுபற்றி தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி மேலாளர் யூசுப் பிர்மா கூறும்பொழுது, ‘படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளனர். பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் அவர்கள் பயணித்து உள்ளனர். 

பயணிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி நாங்கள் கூறிய அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை. படகில் 30 பஜாஜ் மோட்டார் சைக்கிள்களும் ஏற்றப்பட்டு உள்ளன. நாங்கள் இன்னும் மீட்பு பணியை தொடர்ந்து வருகிறோம். காணாமல் போன 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கலாம்’ என கூறியுள்ளார்.

நைஜரில் படகு விபத்துக்கள் இடம்பெறுவது ஒரு பொதுவான நிகழ்வாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் மத்திய நைஜர் மாநிலத்தில் அதிக சுமை கொண்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad