பைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (F.D.A) அனுமதி அளித்துள்ளது.
இது அமெரிக்காவில் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கியமான படியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தலைக் குறைப்பதன் மூலம் பாடசாலைகளை மீண்டும் திறக்கப்படுவதற்கான தடையை தடுப்பூசி நீக்குகிறது.
இதன் மூலம் அமெரிக்காவில் 17 மில்லியன் குழந்தைகளை விளையாட்டுகளில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.
12 முதல் 15 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது உலக அளவில் இதுவே முதல் முறையாகும்.
இளம் பருவத்தினருக்கு சுமார் 20,000 தடுப்பூசி வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.
சில மாநிலங்களாக சுகாதார அதிகாரிகள் இளைஞர்களை இலக்காகக் கொண்ட நோய்த்தடுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
12 முதல் 15 வயதிற்குட்பட்ட 2,260 பேரிடம் பைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.96 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதையடுத்து அங்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment