கொரோனாக்கு உலகெங்கும் 115,000 சுகாதார ஊழியர் பலி - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

கொரோனாக்கு உலகெங்கும் 115,000 சுகாதார ஊழியர் பலி

உலகெங்கும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் சுமார் 115,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து நாடுகளும் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் கேட்டுக் கொண்டார்.

உலகெங்கும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்காகச் செய்த தியாகத்தை அவர் பாராட்டினார். 

சுமார் 18 மாதங்களாகச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே நின்று போராடிவருவதாக அவர் கூறினார்.

தடுப்பு மருந்துகள் சமமாக விநியோகம் செய்யப்பட்டிருந்தால் உலகம் முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களுக்கும் முதியோருக்கும் அவற்றைக் கொடுத்திருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 

அதிக அளவிலான தடுப்புமருந்துகளை இருப்பில் வைத்துள்ள பணக்கார நாடுகள் அவற்றைப் பகிர்ந்துகொள்வதற்கு, டொக்டர் டெட்ரோஸ் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad