சீனாவை உலுக்கிய சூறாவளி : 11 பேர் பலி, 102 பேர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 3, 2021

சீனாவை உலுக்கிய சூறாவளி : 11 பேர் பலி, 102 பேர் படுகாயம்

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் நாந்தோங் நகரை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது.

மணிக்கு 162 கிலோ மீற்றர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன.

புயலைத் தொடர்ந்து அங்கு கனமழை பெய்துள்ளது. இதில் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

வீதிகளில் வெள்ளம் ஆறாக ஓடியதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனிடையே புயல், மழையை தொடர்ந்து நாந்தோங் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

புயல், மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 102 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment