ஐக்கிய சமாதான கூட்டமைப்பினால் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு புதிய உறுப்பினராக சுபைர் முஹம்மது ராபிக்கு கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் முன்னிலையில் செயலாளர் நாயகம் ஹசனலி 2021.04.13ம் திகதி நியமனத்தினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்
மேலும் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கொழும்பு, புத்தளம் மற்றும் இன்னும் சில மாவட்டங்களில் போட்டியிட கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைவாக தற்போது வேட்பாளர்களுக்கான தேர்வுகள் நடைபெறுவதோடு, இது தொடர்பில் பல பிரதேசங்களில் இருந்து பலரும் எம்மோடு தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment