14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

14 நாட்களுக்கு பூட்டப்பட்டது கலால் திணைக்களம்

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கலால் திணைக்களத்தின் நிர்வாகப் பிரிவை 14 நாட்கள் மூடிவைக்குமாறு சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைக்கமைய அதனை மூடி வைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கலால் திணைக்களம் மேலும் கூறியுள்ளதாவது, இராஜகிரியவில் அமைந்துள்ள கலால் திணைக்களத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டமையினால், அந்த நிறுவன ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியிருந்தது.

இதனால் கலால் திணைக்களத்தின் சுற்றிவளைப்பு பிரிவு எதிர்வரும் 14 நாட்கள் வரை மூடிவைக்கப்படவுள்ளது.

இதன்போது மதுபானம், போதைப் பொருள் மற்றும் புகையிலை குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் 1913 என்று இலக்கத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். இந்த தொலைபேசி இலக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும் செயற்பாட்டில் இருக்கும்.

No comments:

Post a Comment