கருத்து வேறுபாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானது, அரசாங்கத்தினால் மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

கருத்து வேறுபாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானது, அரசாங்கத்தினால் மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்படும். வேறுப்பட்ட கொள்கையினை கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணியமைத்துள்ள போது கருத்து வேறுபாடுகள் தோற்றம் பெறுவது இயல்பானது. இவ்வாறான தன்மையே இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தல் காலத்திலும் காணப்பட்டது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை ஆகிய இவ்விருகாரணிகளையும் கொண்டு ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அனைத்து முரண்பாடுகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காணப்படும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நாளாந்தம் கைது செய்யப்படுகிறார்கள்.

குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு முன்னர் இறக்குமதி செய்யபட்ட 6,000 ஆயிரம் வாள்கள் தொடர்பில் விசாரணகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆதாரங்களை சிறந்த முறையில் முதலில் திரட்டிக் கொள்ள வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தினால் எடுக்க முடியாது. அவ்விடயம் குறித்து சட்டமா அதிபர் ஆராய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad