கொழும்பு ஹில்டன் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் உருவாக்கும் ஊடக மையம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

கொழும்பு ஹில்டன் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் உருவாக்கும் ஊடக மையம்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கொழும்பு ஹில்டன் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து ஊடக மையம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபகத்தின் தலைவர் குமார் நடேசன் மற்றும் கொழும்பு ஹில்டன் நிறுவனத்தின் பொது முகாமையாளர் மகேஷ் பிரனாந்து ஆகியோர் ஊடக மையம் தொடர்பிலான முதற்கட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் கடந்த வாரம் கைச்சாத்திட்டனர்.

இதற்கமைய கொழும்பு ஹில்டன் நிறுவனம் இந்த ஊடக மையத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்கும்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஊடகத்துறை தொடர்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளவர்கள் இந்த ஊடக மையத்தில் செயற்பாட்டு ரீதியில் அங்கம் வகிப்பார்கள்.

இதேவேளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான முக்கியத்துவம் பெறுகின்ற விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்படும்.

பத்திரிகை வெளியீட்டு சங்கம், இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை, சுதந்திர ஊடக மையம், இலங்கை தொழிற்துறை ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக சேவை தொழிற்துறை சம்மேளனம், இலங்கை முஸ்லிம் ஊடக பேரவை, தமிழ் ஊடாக கூட்டமைப்பு மற்றும் தென்னாசிய சுதந்திர ஊடக சங்கம், இலங்கை சார்பில் பங்குவகிக்கும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துக்கு கீழ் இந்த ஊடக சமூகம் செயற்படும்.

கேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad