எனக்கு உதவிய ஒரு மனிதர் மைத்திரி, எனது பயணங்களில் சிலர் இடையூறு - சஜித் கடுந்தொனியில் எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

எனக்கு உதவிய ஒரு மனிதர் மைத்திரி, எனது பயணங்களில் சிலர் இடையூறு - சஜித் கடுந்தொனியில் எச்சரிக்கை

தனது பயணத்திற்கும் தனது கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் நபர்கள் இருந்தால் கட்சியை விட்டு வெளியேறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களைப்போல யாரும் எனது வேலையில் தலையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஹம்பாந்தோட்டை, கிரிந்தவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே சஜித் பிரேமதாச இந்த எச்சரிக்கையை தெரிவித்தார்.

நான் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே அரசியல் செய்து வருகிறேன். அரசியலில் இருக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு வேலை செய்ய இடமளிக்கப்படவில்லை. என்னை காலால் இழுத்தார்கள். எனக்கு இடையூறு செய்தார்கள். 

எந்தப் பிரச்சினை இருந்தாலும் எனக்கு உதவிய ஒரு மனிதர் இருந்தார். அதுதான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தன்னால் முடிந்த ஒத்துழைப்பை அளித்தார். 

இப்போது எனது கட்சிக்குள் யாரும் என்னை காலால் இழுக்க இடமளிக்க மாட்டேன். அவ்வாறு காலால் இழுப்பவர்களுக்கு கட்சியை விட்டு வெளியில் சென்று தமது வேலைகளை செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad