ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலுக்கு புதுமுகம் - புதிய வியூக முயற்சியில் ரணில் - News View

Breaking

Post Top Ad

Sunday, April 4, 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியலுக்கு புதுமுகம் - புதிய வியூக முயற்சியில் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய முகமொன்றை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தேசியப்பட்டியல் உறுப்புரிமையை பெற்று பாராளுமன்றம் செல்ல மறுத்த ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழு தீர்மானத்தை மதித்து பாராளுமன்றம் செல்ல கடந்த மாதம் விருப்பம் தெரிவித்த போதும் இறுதியில் அந்த திட்டத்தை அவர் கைவிட்டுள்ளார்.

கடந்த 8 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிரேஷ்ட தொழிற்சங்கவாதியும் பொருளாதார நிபுணருமாகிய ஒருவரை நியமிக்க ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

நாட்டில் தற்போது தொழில்துறை ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதால் தொழில் மற்றும் பொருளாதார துறை நிபுணர் ஒருவரை பாராளுமன்றுக்கு அனுப்ப ரணில் முடிவு செய்துள்ளார். அந்த நபர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad