தாய்வான் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகுகிறார் போக்குவரத்து அமைச்சர்? - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

தாய்வான் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகுகிறார் போக்குவரத்து அமைச்சர்?

தாய்வானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று போக்குவரத்து அமைச்சர் லின் சியா லொங் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் நேர்ந்த மிக மோசமான இந்த ரயில் விபத்தில், குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர்.

முதற்கட்ட மீட்புப் பணிகள் முடிவுற்ற பின்னர் பதவியிலிருந்து விலக லின் திட்டமிடுகிறார். விபத்துக்கான முழுப் பொறுப்பையும், தாம் ஏற்றுக் கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அவரது பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த வாரம் லின் பதவி விலக முயன்றபோது, தாய்வான் பிரதமர் அதை நிராகரித்தார். 

இந்நிலையில், விபத்துக்குக் காரணமாகக் கருதப்படும் கனரக வாகனத்தின் ஓட்டுநர், மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டுமானத் தள நிர்வாகியான லீ யி சியாங் புலனாய்வு அதிகாரிகளோடு ஒத்துழைக்கப்போவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment