பண்டிகைக் காலத்தில் பயணத்தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை : இராணுவத் தளபதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை : இராணுவத் தளபதி

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை என COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் நாளாந்தம் 200 க்கும் குறைவான கொரோனா தொற்றாளர்களே பதிவாவதாகவும் அவர் கூறினார்.

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை விதிக்கப்படாவிட்டாலும், சில பகுதிகளில் திடீர் கொரோனா சோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

எனினும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் நிலவுமாயின், அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தயாராகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad