இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாட்டு குற்றச்சாட்டு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாட்டு குற்றச்சாட்டு

பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் “பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில்” ஈடுபடுவதாகவும் அதனுடனான இராஜதந்திர உறவுகளை சர்வதேச சமூகம் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் முன்னணி மனித உரிமை குழு ஒன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனித உரிமைக் கணக்காணிப்புக்குழு வெளியிட்டிருக்கும் 213 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், ஜோர்தான் நதி தொடக்கம் மத்தியதரைக் கடல் வரையான பகுதியில் வாழும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் யூத - இஸ்ரேலிய மேலாதிக்கத்தை முன்னெடுப்பது குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. 

“இஸ்ரேலின் அரைநூற்றாண்டு ஆக்கிரமிப்பு ஒரு தாற்காலிக நிலை என்றும் பல தசாப்தங்கள் நீளும் அமைதி செயற்பாடுகள் அதனை சரி செய்யும் என்றும் உலகம் கருதும் நிலையில், பலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறை பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குற்ற வரையறையை பூர்த்தி செய்கின்ற அம்சங்களை எட்டியுள்ளது” என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு நிறைவேற்றுப் பணிப்பாளர் கென்னத் ரோத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை நிராகரித்திருக்கும் இஸ்ரேல் இது ஒரு ‘பரப்புரை’ செயற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad