யாழில் கொள்ளை கும்பல் அட்டகாசம் : வயோதிப தம்பதிக்கு கொடுத்த சித்திரவதையில் கணவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 11, 2021

யாழில் கொள்ளை கும்பல் அட்டகாசம் : வயோதிப தம்பதிக்கு கொடுத்த சித்திரவதையில் கணவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - தென்மராட்சி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இதில் வயோதிபர் சிவராசா (வயது72) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, குறித்த வீட்டுக்குள் புகுந்த மூவர் கொண்ட கொள்ளை கும்பல், அங்கிருந்த வயோதிபர் தம்பதிகளை கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர்.

இதன்போது நகை மற்றும் பணம் ஆகியவற்றினை எங்கு வைத்துள்ளீர்கள் என கேட்டு, வயோதிபரின் கழுத்தை அவர்கள் நெரித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நகைகள் மற்றும் ஒன்றரை இலட்சம் பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டு குறித்த குழு, தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment