வாழைச்சேனையில் தொற்றாளர்களுடன் நெருங்கிய மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை - News View

Breaking

Post Top Ad

Monday, April 5, 2021

வாழைச்சேனையில் தொற்றாளர்களுடன் நெருங்கிய மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிய உறவுகள் மற்றும் முகக்கவசம் அணியாது பயணிப்பவர்களுக்கு மேலெழுவாரியாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வீதிகளில் முகக்கவசம் அணியாது சுகாதார விதிமுறைகளை மீறியவர்களை பொலிஸாரின் உதவியுடன் பிடித்து மேலெழுவாரியாக பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றது.

இதன்போது இருபது பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.

குறித்த பி.சி.ஆர். பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டதுடன், தொற்று நீக்கிகளும் விசிறப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad