பாம் ஒயிலுக்கான தடை குறித்து விளக்கமளித்தார் ஜனாதிபதி கோட்டாபய - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

பாம் ஒயிலுக்கான தடை குறித்து விளக்கமளித்தார் ஜனாதிபதி கோட்டாபய

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்தமைக்கான காரணம் இறக்குமதி செய்யப்படும் பாம் எண்ணெய் பாவனை பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதனாலாகும்.

பாம் எண்ணெய் பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் பெரும்பாலும் பிரதானமான பல நோய்களை உருவாக்குவதாக வைத்தியர்கள், உணவு தொடர்பான விசேட நிபுணர்கள் மூலம் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனாலும் உரிய தரப்படுத்தப்பட்ட பாம் எண்ணெய் வகையைக் கொண்டு பிஸ்கட், உணவு பண்டங்கள், ஒரு சில பான் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

1511.90.10 எனும் குறியீட்டைக் கொண்ட வகை (Harmonized System code) அவ்வாறானதாகும். அது புழக்கத்தில் பாம் ஸ்டியரின் என்று (Palm Stearin) குறிப்பிடப்படும். இந்த உப உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக இவ்வகையை இறக்குமதி செய்வதற்கு எவ்வித தடைகளும் இல்லை எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment