(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜெனிவா நெருக்கடிகளை எமது அரசாங்கம் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. ஆனால் ஜெனிவா விவகாரங்களை கையாள எமது தூதரகம் மிகச்சரியான வேலைத்திட்டத்தை கையாண்டதென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஜெனிவா விவகாரம் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.
"ஜெனிவா நெருக்கடியை கையாள்வதில் எமது அரசாங்கம் பலவீனமடைந்திருக்க முடியும், நீங்கள் அதைத்தான் கூறப் போகின்றீர்கள், ஆனால் உங்களின் அரசாங்கமும், அரச அதிகாரிகளும் பலவீனப்பட்டுள்ள காரணத்தினால்தான் இம்முறை ஜெனிவாவில் 46/1 பிரேரணையில் தோல்வியை கண்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜெனிவா விடயங்களை கையாள்வதில் எமது நட்பு நாடுகள் மற்றும் எம்முடன் நெருக்கமாக செயற்படும் நாடுகளிடம் எமது தரப்பு காரணிகளை முன்வைத்தோம். 
அதேபோல் ஜெனிவா நெருக்கடிகளை எமது அரசாங்கம் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. எவ்வாறு இருப்பினும் எமது தூதுக்குழு, தூதரகம் இந்த விடயத்தில் செய்ய வேண்டிய உயரிய சேவையினை செய்துள்ளது.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுடன் இணைந்தும், தனித்தும் எமது தூதரகம் கடமையாற்றி நாட்டிற்காக செயற்பட்டுள்ளது. 
எவ்வாறு இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகல கொள்கைக்கு எதிராகவும் குற்றம் சுமத்துகின்றனர். இப்போது வெளிநாட்டு தூதுவர்களை நியமிப்பது குறித்த நடவடிக்கைகளிலும் குற்றம் சுமத்துகின்றனர் என்றார்.
 
 
 

 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment