பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, April 11, 2021

பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஏழாவது பொதுக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

கல்முனைய பிரதேசத்தில் ஒன்றியத்தின் தலைவர் அஹ்மத் ஸாதிக் தலைமையில் குறித்த பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு அங்கத்தவர்கள், முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர்கள், பெண்கள் பிரிவின் தலைவிகள், பிரதிநிதிகள் மற்றும் இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கடந்த காலங்களில் முஸ்லிம் மஜ்லிஸ்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டது. அத்துடன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்து பல்கலைக்கழகங்களிலுள்ள முஸ்லிம் மஜ்லிஸ்களாலும் செயற்படுத்த வேண்டிய வகையில் கொள்கை வகுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து இறுதிக் கட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு இக்கொள்கையை மிக விரைவில் வெளியிடுவதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களின் இவ் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுக்களின் அறிமுகமும், மஜ்லிஸ்களின் கடந்த கால செயற்பாடுகள், தற்காலத்தில் (கொவிட்-19 காலப்பகுதியில்) மஜ்லிஸ்கள் எதிர்நோக்கும் சவால்கள் எதிர்கால நடவடிக்கைகள், எதிர்வரும் ரமழான் மற்றும் பல்கலைக்கழகங்களை மீளத்திறத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment