யாழில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம் ! இயல்பு நிலையில் வைத்திருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

யாழில் திங்கள் முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம் ! இயல்பு நிலையில் வைத்திருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னர் நேற்று மாலை வரையான நிலைவரப்படி ஆயிரத்து 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 12 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 600 பேரளவில் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருவதாக அரச அதிபர் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 42 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், யாழ். மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment