சம்பா அரிசியை 89 ரூபாவுக்கும், நாட்டரிசியை 90 ரூபாவுக்கும் வழங்க தனியார் உரிமையாளர்கள் உடன்பாடு : அமைச்சர் மஹிந்தானந்த - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

சம்பா அரிசியை 89 ரூபாவுக்கும், நாட்டரிசியை 90 ரூபாவுக்கும் வழங்க தனியார் உரிமையாளர்கள் உடன்பாடு : அமைச்சர் மஹிந்தானந்த

சம்பா அரிசியை 89 ரூபாவுக்கும், நாட்டரிசியை 90 ரூபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தனியார் துறையினருடன் விவசாய அமைச்சு போட்டித்தன்மை நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக தற்பொழுது அரிசி விலை வீழ்சசியடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் அனுராதபுரம் ஜெயஸ்ரீ மாபோதியில் தற்பொழுது (04.04.2021) நடைபெறும் தேசிய புத்தரிசி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

விவசாயிகளின் உற்பத்திக்கு கூடுதலான விலையை வழங்குவது போன்று, குறைந்த விலையில் அரிசியை நுகர்வோருக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி எம்மிடம் வலியுறுத்தினார். 

சவால் மிக்க இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள 500 சதொச கிளை வலைப்பின்னல் ஊடாகவும், 2,500 கூட்டுறவு விற்பனை நிலையங்களுடாகவும் 93 ரூபாவுக்கு அரிசியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம். தற்பொழுது சந்தையில் அரிசியை 93 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள கூடிய நிலைமை உண்டு.

ஜனாதிபதியின் வரலாற்றில் முதல் முறையாக 23 ஆயிரம் மில்லியன் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எம்மால் முடிந்துள்ளது. 18 ஆயிரம் தொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாகவும், கூட்டுறவு சங்கங்கள் ஊடாக 5,000 தொன்னையும், மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் 2,000 மெட்றிக் டொன்னையும் கொள்வனவு செய்ய முடிந்தது. 

3 இலட்சம் மெட்றிக் டொன் நெல்லை அரசாங்கம் கையிருப்பில் வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக தனியார் துறையுடன் போட்டியிட்டு நிவாரண விலையில் அரிசியை பெற்றுக் கொடுப்பதற்காக ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் செயல்பட்டு வருகின்றோம்.

அன்று 101 ரூபாவுக்கு விற்பனை செய்த நாட்டரிசியை 89 ரூபாவுக்கு விற்பனை செய்ய தனியார் துறையினர் முன்வந்துள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக தனியார் துறையினருடன் போட்டியிடுவதற்கு பெரும் தொகையான பணத்தை நெல் கொள்வனவுக்காக ஜனாதிபதி வழங்கியமையே இதற்கு காரணமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக 6 மில்லியன் கிலோ அரிசி இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நீர்ப்பாசனம், தேசிய விவசாயம், தேசிய பெருந்தோட்டத்துறை ஆகியவற்றை நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளார். 

கடந்த காலங்களில் நாம் இறக்குமதி பொருளாதாரத்திலேயே தங்கியிருந்தோம் இதனை உற்பத்தி பொருளாதாரமாக மாற்றி அமைப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். 

கடந்த பெரும்போகத்தில் நாம் 7 இலட்சத்து 66 ஆயிரம் ஹொக்டர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தியை மேற்கொண்டோம். பெரும்போக அறுவடையின் மூலம் 3.5 மெட்றிக் டொன் நெல்லை பெற்றுக்கொண்டோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment