யாழ். மாநகரில் மேலும் 34 பேருக்கு கொரோனா ! மூடப்பட்ட ஆறு வர்த்தக நிலையங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 11, 2021

யாழ். மாநகரில் மேலும் 34 பேருக்கு கொரோனா ! மூடப்பட்ட ஆறு வர்த்தக நிலையங்கள்

யாழ். மாநகரில் சந்தை, கடைத் தொகுதியின் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நகர கொத்தணியில் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் எடுக்கப்பட்ட 431 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிடைக்கப் பெற்றிருந்தன.

இதேவேளை, புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 22 பேர் சார்ந்த ஆறு வர்த்தக நிலையங்கள் யாழ். மாநகரின் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்புக்கமைய மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment