இந்தியாவில் ஒரே நாளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 புதிய கொரோனா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று காலை உறுதிபடுத்தியுள்ளது.
இந்தியா வியாழக்கிழமை காலை வரை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாகவும் தினசரி 1 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்களை பதிவுசெய்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் 1.5 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
எனினும் தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தமை இதுவே முதல் முறையாகும்.
மொத்த கொரோனா நோயாளர்கள்: 1,40,74,564
குணமடைந்தோர்: 1,24,29,564
சிகிச்சை பெறுவோர்: 14,71,877
இறப்பு : 1,73,123
தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 11,44,93,238
No comments:
Post a Comment