இலங்கையில் 11 இயக்கங்களுக்கு தடையின் எதிரொலி : இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : தமிழகத்தில் ஊடுருவலாம் என எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, April 16, 2021

இலங்கையில் 11 இயக்கங்களுக்கு தடையின் எதிரொலி : இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : தமிழகத்தில் ஊடுருவலாம் என எச்சரிக்கை

இலங்­கையில் அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்படும் 11 இஸ்­லா­மிய இயக்­கங்கள் அர­சாங்­கத்­தினால் தடை செய்­யப்­பட்­டுள்­ளதால் இந்­தி­யாவில் பாது­காப்பு பலப்படுத்தப்பட்டுள்­ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடை செய்­யப்­பட்ட இயக்­கங்­களைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் இந்­தி­யாவின் தமி­ழ­கத்­துக்குள் ஊடு­ரு­வலாம் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தை ய­டுத்து தமிழ் நாட்டின் விமான நிலை­யங்கள் மற்றும் கரை­யோர மாவட்­டங்­களின் பாதுகாப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இலங்கை அர­சாங்கம் அல்­கைதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­புகள் உட்­பட 11 அடிப்­ப­டை­வாத இயக்­கங்­க­ளுக்கு தடை­வி­தித்து வர்த்தமானி­ அ­றி­வித்தல் வெளி­யிட்­ட­தை­ய­டுத்தே உட­ன­டி­யாக தமிழக அரசு இதனை முன்­னெ­டுத்­துள்­ளது.

மாநில காவல் துறைப்­ப­ணிப்­பாளர் நாயகம் ஜே.கே.திரு­பதி தமிழகத்தின் விமான நிலை­யங்கள் மற்றும் கரை­யோர பகு­தி­களின் பாது­காப்­பினை பலப்­ப­டுத்­து­மாறு அனைத்து பொலிஸ் ஆணையாளர்­க­ளுக்கும், உய­ர­தி­கா­ரி­க­ளுக்கும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

சட்டம் மூலம் தடை செய்­யப்­பட்­டுள்ள இயக்­கங்­களின் உறுப்பினர்கள் தீவி­ர­வா­திகள் அல்­லது பயங்­க­ர­வா­திகள். அவர்கள் பயிற்­சிகள் பெற்­ற­வர்கள் அவர்கள் தமிழ்­நாட்டில் புக­லிடம் பெறுவதற்கு வாய்ப்­புண்டு. புவி­யியல் ரீதியில் அவர்கள் ஆத­ரவு பெற்­றுக்­கொள்ள முடியும்.

இலங்­கை­யி­லி­ருந்து சமய அடிப்­ப­டை­வா­திகள் ஆகா­ய­மார்க்­க­மாக அல்­லது கடல் மார்க்­க­மாக சட்­ட­வி­ரோ­த­மாக வந்­த­டை­வ­தற்­கான சாத்­தியம் உள்­ள­தா­கவும் மாநி­ல­காவல் துறை­ப­ணிப்­பாளர் நாயகம் ஜே.கே.திரு­பதி தெரி­வித்தார்.

மீன்­பிடி பட­குகள் தீவி­ர­வா­தி­களை வங்­காள விரி­குடா ஊடாக அழைத்­து­வ­ரலாம். உள்ளூர் அனு­தா­பிகள் அவர்­க­ளது பயணத்துக்கும், உண­வு­க­ளுக்கும் உத­விகள் வழங்­கலாம். தீவிரவாதிகள் தமி­ழக மாநி­லத்தில் புக­லிடம் பெற்­றுக்­கொண்­டதன் பின்பு அவர்­களின் இஷ்­டப்­படி இலங்­கைக்கு எதி­ராக சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை இந்­திய மண்­ணி­லி­ருந்து மேற்­கொள்­ளலாம் எனவும் அவர் தெரி­வித்தார். அடிப்­ப­டை­வா­திகள் தமி­ழ­கத்தை தளமாகக் கொண்டு இயங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டா­தெ­னவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

உள­வுப்­பி­ரி­வொன்­றினை ஸ்தாபித்து தமிழ்­நாட்டில் தளமொன்றினை அமைப்­பதை தடை­செய்யும் வகையில் கடுமையான மேற்­பார்வை செய்­யும்­படி அவர் சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­களைப் பணித்­துள்ளார்.

சில அடிப்­ப­டை­வாத இயக்­கங்கள் குறிப்­பாக தேசிய தெளஹீத் ஜமாஅத் என்­பன இலங்கை அர­சாங்­கத்­தினால் தடை செய்யப்பட்டுள்­ளன. அவை இந்­திய தெளஹீத் ஜமா அத்­துடன் தொடர்­பு­க­ளைப்­பேணி வரு­கின்­றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உயர்குழு (ஜனாதிபதி ஆணைக்குழு) பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த தற்கொலை தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 11 பேர் இந்தியர்கள்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 11 அடிப்படைவாத இயக்கங்களை சட்டரீதியாக தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

Vidivelli

No comments:

Post a Comment