கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் நடைபெறவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரின் பொர்னான்டோ தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா எதிர்வரும் 15ஆம் திகதி (திங்கட்கிழமை) பி.ப 2.30 மணி தொடக்கம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சுகாதார வழி முறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சகல பதவி நிலை அங்கத்தவர்கள், சர்வ மதத் தலைவர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள், மாகாண சபை அங்கத்தவர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சியின் மகளிர் சக்தியின் பிரதிநிதிகள், இளைஞர் சக்தியின் பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் உட்பட ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 20 அங்கத்தவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சுகாதார பிரிவினரின் வழிகாட்டல்கள் மற்றும் வேண்டுகோள்களின் அடிப்படையில் கொவிட்19 சட்ட திட்டங்களின் பிரகாரமும் ஏனைய பாதுகாப்பு வரையறைகளுடன் நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad