சுற்றாடல் பாதிப்பு தொடர்பான உண்மைத் தகவல்கள் இரு வாரங்களுக்குள் பகிரங்கப்படுத்தப்படும் - கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

Breaking

Post Top Ad

Thursday, March 25, 2021

சுற்றாடல் பாதிப்பு தொடர்பான உண்மைத் தகவல்கள் இரு வாரங்களுக்குள் பகிரங்கப்படுத்தப்படும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)

சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் தற்போது நாடகங்களே அரங்கேற்றப்படுகின்றன. இவை தொடர்பான உண்மைத் தகவல்கள் இரு வாரங்களுக்குள் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறவில்லை என்று நாம் கூறவில்லை. எனினும் இது தொடர்பில் குறிப்பிட்ட சிலரால் புனையப்பட்ட நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

விகாராமஹாதேவி பூங்கா வளாகத்தில் பாரிய சித்திரம் காட்சிப்படுத்தப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதன் பின்னணி இதுவேயாகும்.

இதனை காட்சிப்படுத்த மாநகர சபையே அனுமதியளித்துள்ளது. பின்னர் மாநகர சபையினால் அது இரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் அரசாங்கத்தின் தலையீடு கிடையாது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பிலும், சுற்றாடல் பாதிப்பு தொடர்பிலும் முன்னெக்கப்படுகின்ற செயற்பாடுகளின் உண்மைத் தன்மை இரு வாரங்களுக்குள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad