கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கான சட்டவரைபை, வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 25, 2021

கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்வதற்கான சட்டவரைபை, வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி

கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்வதற்கான சட்டவரைபை, வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

அத்துடன், இச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்வதற்கு, கடந்த ஜனவரி மாதம் 04ஆம் திகதி, அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அதற்குத் தேவையான சட்டமூலம், சட்டவரைஞர்களினால் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்வதற்கான சட்டவரைபை, வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment