யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவிட்-19 நோய்த் தொற்று நிலமை தொடர்பில் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தலைமையில் அவசர கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
மாவட்ட செயலகத்தில் இன்று மாலை ஆரம்பமான கூட்டம் தற்போதுவரை தொடர்கிறது.
யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆ.கேதீஸ்வரன் மற்றும் இராணுவம், பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர பகுதியை முடக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment