மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் போன்றோர் துன்புறுத்தப்படக் கூடாது - எட்டு நாடுகள் கூட்டாக வலியுறுத்து! - News View

About Us

About Us

Breaking

Thursday, March 11, 2021

மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் போன்றோர் துன்புறுத்தப்படக் கூடாது - எட்டு நாடுகள் கூட்டாக வலியுறுத்து!

மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோர் துன்புறுத்தப்படக் கூடாது என கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து, சுவீடன், எஸ்டோனியா, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் தூதுவர்களால் இவ்வாறு கூட்டாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்காக முன்னிற்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்றோரை துன்புறுத்தக் கூடாது என்பதுடன், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் குறித்த நாடுகளின் தூதுவர்கள் கூட்டறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளனர்.

திறமை வாய்ந்த சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் மாதம் முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக மனித உரிமைகளுக்கான தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனித உரிமைகளுக்காக போராடுபவர்களை, பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் எந்தவொரு நாட்டினதும் அவசியம் என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அவ்வாறானோரை பாதுகாப்பது அனைத்து அரசாங்கங்ளின் பொறுப்பாகும் எனவும் அவர்களை துன்புறுத்தலாகாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment