கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் : வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் : வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ்

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரிய வளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஆறுகளை பாதுகாப்போம். தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிகையில், மனித நாகரீகங்கள் நதிக்கரைகளிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு இயற்கை மீது மனிதன் செலுத்துகின்ற ஆதிக்கமானது, மனித வாழ்வுக்கு ஒவ்வாத சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இன்று குடிநீருக்கான தட்டுப்பாடு இருக்கின்றது. இதேபோல் வடக்கு மாகாணத்தில் ஏனைய பிரதேசங்களிலும் இன்று குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில் நதிக்கரைகளில் சுத்தமான நீரை மனிதன் பெற்றான். ஆனால் இன்று குடிநீருக்கே பாரிய பிரச்சினை எழுந்துள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய வழங்களில் ஒன்றாக காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கனகராயன் ஆற்றுப் பகுதியில் கீழ் தொடர்ச்சியாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது. இது எதிர்காலத்தில் நீர்த் தேக்கத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

அரச அதிகாரிகள், அரச திணைக்களங்கள், சுற்று நிருபங்களை வைத்துக்கொண்டு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடாத்தி பொலிஸ் இராணுவத்தினரின் பாதுகாப்பினை பயன்படுத்தியும் இதனை கட்டுப்படுத்த முடியும் என்பதை விட, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால சந்ததினை கருத்தில் கொண்டு செயற்படுவார்கள் எனின் இவ்வாறான இயற்கை மீதான காடழிப்பு மணல் அகழ்வு என்பன இடம்பெறாது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad