ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் சமூர்த்திக் குடும்பங்களும், குறைந்த வருமானம் பெரும் 25 ஆயிரம் குடும்பங்களும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்களின் நாளாந்த வாழ்க்கையை சீரான முறையில் பேண முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுபீட்சத்தின் தொலைநோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய தேசத்திற்கு ஒளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொரோன தொற்றுக்கு மத்தியிலும் மக்களின் நலனைக் நோக்காகக் கொண்டு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad