திருகோணமலை எண்ணெய் தாங்கிகளுக்கான பதில் வெகுவிரைவில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் - அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளுக்கான பதில் வெகுவிரைவில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் - அமைச்சர் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பதில் வெகுவிரைவில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய வெகுவிரைவில் இதற்கான பதிலை வழங்க முடியும்.

அமைச்சர் உதய கம்மன்பில இது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். குறித்த செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டவுடன், அரசாங்கம் தீர்மானத்தை அறிவிக்கும்.

வெவ்வேறு முதலீடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

அதற்கேற்ப நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment