நாடு திரும்பியது இலங்கை லெஜண்ட்ஸ் அணி - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

நாடு திரும்பியது இலங்கை லெஜண்ட்ஸ் அணி

2021 வீதி பாதுகாப்பு டி-20 உலக சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி நேற்று மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியாவின் சென்னையிலிருந்து இண்டிகோ ஏயர்லைன்ஸ் விமானம் 6E-9912 மூலமாக இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் நேற்று மாலை 5.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ராய்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்திய லெஜண்ட்ஸ் அணியிடம் 14 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad